PBT

எம்பிகே, நடைபாதையை மறைத்த 10 சட்ட விரோத கடைகளை மூடியது !!!

3 மே 2020, 2:55 AM
எம்பிகே, நடைபாதையை மறைத்த 10 சட்ட விரோத கடைகளை மூடியது !!!

கிள்ளான், மே 3:

பூலாவ் இண்டா மற்றும் பத்து பெலா பகுதிகளில் பல்வேறு தவறுகளின் பேரில் பத்து அந்நிய நாட்டவர்களின் கடைகளை கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) மூடும்படி கட்டளை பிறப்பித்துள்ளது என்று எம்பிகேவின் தலைவர் டாக்டர் அமாட் ஃபாஸ்லி அமாட் தாஜுடின் கூறினார். இதில் அந்நியர்கள் வியாபார உரிமங்கள் இல்லாமலும் மற்றும் நடைபாதையை மறைத்த காரணங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

" பூலாவ் இண்டாவில் ஏழு கடைகள் முதல் மற்றும் இரண்டாம் தொழில் பேட்டைகளில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு கடைக்கு வியாபார உரிமம் இல்லாத காரணத்தால் சட்டப்படி இழுத்து மூடப்பட்டது. மேலும் ஆறு கடைகள் நடைபாதையை மறைத்ததால் மூடும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது," என்று தமது அறிக்கையில் அமாட் ஃபாஸ்லி  தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, மேலும் மூன்று கடைகள் பத்து பெலாவில் வியாபார உரிமம் இல்லாமலும் மற்றும் உயிர் கோழிகளை விற்பனை செய்ததாலும் எம்பிகே சட்ட விதிகளின்படி மூடும் உத்தரவு பிறப்பித்தாக அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.