PBT

மந்திரி பெசார், சுய பாதுகாப்பு ஆடையை வழங்கிய எம்பிஎஸ்ஜேவை பாராட்டினார் !!!

15 ஏப்ரல் 2020, 8:55 AM
மந்திரி பெசார், சுய பாதுகாப்பு ஆடையை வழங்கிய எம்பிஎஸ்ஜேவை பாராட்டினார் !!!

கோவிட்-19 நோய் பரவுவதை தடுக்க பாடுபட்டு வரும் முன் வரிசை பணியாளர்களுக்கு சுய பாதுகாப்பு ஆடையை வழங்கிய சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் (எம்பிஎஸ்ஜே) முயற்சியை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி பாராட்டினார்.

" எம்பிஎஸ்ஜே நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுக்கள்.அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்," என்று தமது டிவிட்டரில் அமிருடின் ஷாரி பதிவு செய்துள்ளார்.

எம்பிஎஸ்ஜே சொந்தமாக சுய பாதுகாப்பு ஆடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆடைகளை ஸ்ரீ கெம்பாங்கான் சுகாதார கிளினிக் மற்றும் பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகம் ஆகியவற்றிற்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த அரிய முயற்சியை 14 எம்பிஎஸ்ஜே பணியாளர்கள் மற்றும் நகர சமுதாய நல்வாழ்வு திட்ட பங்கேற்பாளர்களும் தன்னார்வ முறையில் வெற்றிகரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தினரும் (எம்பிஏஜே) அம்பாங் மருத்துவமனைக்கு தயாரித்து வரும் முயற்சியை மந்திரி பெசார் நினைவு கூர்ந்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.