PBT

எம்டிஎச்எஸ்: பிகேபியை பின்பற்றாத மறு சுழற்சி நிறுவனத்தின் நடவடிக்கை நிறுத்தப்பட்டது

11 ஏப்ரல் 2020, 1:34 AM
எம்டிஎச்எஸ்: பிகேபியை பின்பற்றாத மறு சுழற்சி நிறுவனத்தின் நடவடிக்கை நிறுத்தப்பட்டது

ஷா ஆலம், ஏப்ரல் 11:

உலு சிலாங்கூர் ராசா தொழில் பேட்டையில் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்த மறு சுழற்சி நிறுவனத்தின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிஎச்எஸ்) உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையை உறுதிப் படுத்திய எம்டிஎச்எஸ் தலைவர் சுக்ரி முகமட் அமீன், பொது மக்களின் புகாரை அடிப்படையாகக் கொண்டு மூத்த அமலாக்க உதவி அதிகாரி கைரூல் நிஸாம் முகமட் கனாபி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த அமலாக்க நடவடிக்கையில் 20 எம்டிஎச்எஸ் அதிகாரிகள், உலு சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலகம் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.