PBT

உலக மகளிர் தினம் : மார்ச் 8 ‘வாகனம் இல்லா ஷா ஆலம்’ நிகழ்வு

5 மார்ச் 2020, 3:42 AM
உலக மகளிர் தினம் : மார்ச் 8 ‘வாகனம் இல்லா ஷா ஆலம்’ நிகழ்வு

ஷா ஆலம், மார்ச் 5-

இங்குள்ள மேர்டேக்கா சதுக்கத்தில் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் உலக மகளிர் தினத்தையொட்டி ‘வாகனம் இல்லா ஷா ஆலம்’ நிகழ்ச்சியை ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் ஏற்பாடு செய்யவிருக்கிறது. சிறந்த வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் இந்நிகழ்ச்சி அவிசேனா நிபுணத்துவ மருத்துமனையுன் ஆதரவுடன் நடைபெறும் என்று எம்பிஎஸ்ஏ பொது தொடர்புப் பிரிவுத் தலைவர் ஷாஹ்ரின் அகமது கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது கர்ப்பப்பை நுழைவாயில் புற்று நோய் குறித்து மகளிருடன் கலந்துரையாடல் மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை, ஜுமா உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகளை அவிசேனா ஏற்பாடு செய்யும் என்று அவர் சொன்னார்.

“அதே வேளையில், மாநில அளவிலான மூளை வளர்ச்சி குன்றியோர் தினத்தையொட்டி சிலாங்கூர் மூளை வளர்ச்சி குன்றியோர் சங்கத்துடனும் எம்பிஎஸ்ஏ ஒத்துழைப்பு நல்கும் என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.