PBT

வாகன நிறுத்துமிட நேரத்தை கூடுதல் பட்சம் 2 மணி நேரமாக வரையறுப்பீர்!

19 பிப்ரவரி 2020, 6:34 AM
வாகன நிறுத்துமிட நேரத்தை  கூடுதல் பட்சம் 2 மணி நேரமாக வரையறுப்பீர்!

பெட்டாலிங் ஜெயா, பிப்.19-

இங்குள்ள ஜாலான் செக்ஸன் 52/2 நியு டவுன் பகுதியில் கூடுதல் பட்சம் 2 மணி நேர வாகன நிறுத்த வரையறையை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் அமல்படுத்தினால், பொது மக்கள் அப்பகுதியில் தங்கள் அலுவல்களை நிறைவேற்றுவதற்கு வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான வாகன நிறுத்துமிடங்கள் இருப்பதால், நாள்தோறும் காலை முதல் மாலை வரையில் வாகனங்கள் தொடர்ந்து நிறைந்திருப்பதன் காரணமாக, வெளி இடங்களில் இருந்து வருவோர் தங்கள் அலுவல்களை நிறைவேற்ற சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜிவ் கூறினார்.

“கடந்த டிசம்பர் மாதம் இப்பகுதியில் வாகன நிறுத்துமிட விவகாரம் குறித்து பொது மக்களின் கருத்துகளை அறிய செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தை நடத்தினேன். பங்கேற்றவர்களின் பெரும்பாலோர் வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை இரண்டு மணி நேரம் மட்டும் நிறுத்தும் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்” என்றார் அவர்.

மேலும், பலர் மின் அஞ்சல் வாயிலாக இந்தத் திட்ட அமலாக்குவதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், தங்களுக்கும் இப்பகுதியில் வாகன நிறுத்துமிடம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர் என்று புக்கிட் காட்சி சட்டமன்ற தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ராஜீவ் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.