PBT

பழைய பொருள் கிடங்கை எம்பிஎஸ் இடித்துத் தள்ளியது!

5 டிசம்பர் 2019, 2:56 AM
பழைய பொருள் கிடங்கை எம்பிஎஸ் இடித்துத் தள்ளியது!

ஷா ஆலம், டிச.5-

இங்குள்ள பிரிமா செலாயாங்கில் உள்ள பழைய பொருட்கள் கடையை செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்) நேற்று இடித்துத் தள்ளியது. ஊராட்சி மன்றத்தின் அங்கீகாரமின்றி அக்கடை கட்டப்பட்டிருந்ததாக எம்பிஎஸ் அறிக்கை தெரிவித்தது.

இந்த சட்டவிரோதக் கிடங்கு சிலாங்கூர் நீர் மற்றும் வடிகால் பாசன துறைக்குச் சொந்தமான நிலத்தில் நிறுவப்படிருந்ததாக அது மேலும் கூறியது. பொது இடத்தில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்த கிடங்கிற்கு 1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டட சட்டத்தின் செக்ஸன் 46(1)ஏ பிரிவின் கீழ் நினைவு கடிதம் ஒன்று கடந்த நவம்பர் 14ஆம் தேதி எம்பிஎஸ் வெளியிட்டதாக அவ்வற்றிக்கை தெரிவித்தது.

எனினும், அவ்விடத்தில் இருந்து வேறு இடம் செல்லாமல் சம்பந்தப்பட்ட கிடங்கின் உரிமையாளர் பிடிவாதமாக இருந்ததாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.