PBT

மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ கருப்பொருளுடன் வாகனமில்லா ஷா ஆலம் தினம்

4 டிசம்பர் 2019, 2:32 AM
மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ கருப்பொருளுடன் வாகனமில்லா ஷா ஆலம் தினம்

ஷா ஆலம், டிச. 4-

‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ என்ற கருப் பொருளுடன் ஷா ஆலம் மாநகராட்சி மன்ற ஏற்பாட்டில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவிருக்கும் வாகனமில்லா ஷா ஆலம் நிகழ்ச்சி வெற்றி பெற பொது மக்கள் ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்நிகழ்ச்சி இங்குள்ள செக்ஸன் 14, மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெறும் என்று மன்றத்தின் பொதுத் தொடர்பு மற்றும் நிறுவனப் பிரிவுத் தலைவர் ஷாஹ்ரின் அகமது கூறினார்.பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் கார்பன் மோனோக்சைட் வெளியீட்டைக் குறைக்கும் நடவடிக்கைக்கும் ஏற்ற வகையில் இந்நிகழ்ச்சி அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.