PBT

எம்பிஎஸ்ஏ ஏற்பாட்டில் பள்ளி விடுமுறை கற்பனை ஆற்றல் பட்டறை

29 நவம்பர் 2019, 3:32 AM
எம்பிஎஸ்ஏ ஏற்பாட்டில் பள்ளி விடுமுறை கற்பனை ஆற்றல் பட்டறை

ஷா ஆலம், நவ.29-

எம்பிஎஸ்ஏ நூலக பள்ளி விடுமுறை திட்டத்தை முன்னிட்டு சிலாங்கூரில் உள்ள 3 நூலகங்களில் கற்பனை ஆற்றல் பட்டறையை ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) ஏற்பாடு செய்யவிருக்கிறது.

இந்நிகழ்ச்சி முத்தியாரா சுபாங், அங்கெரிக் எம்பிஎஸ்ஏ நூலகம், செக்ஸன் யூ5 ( 4-5 டிசம்பர்), கோத்தா கெமுனிங்கில் உள்ள அங்கெரிக் வெனிலா எம்பிஎஸ்ஏ நூலகம், செக்ஸன் 31 ( 12-13 டிசம்பர்) மற்றும் செக்ஸன் 19இல் உள்ள அங்கெரிக் அராண்டா எம்பிஎஸ்ஏ நூலகம் ஆகியவற்றில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பட்டறையின் பயிற்றுவிக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் ஸ்போஞ் கேக் செய்வது மற்றும் மரப் படகு வண்ணம் பூசுதல் ஆகியவையும் அடங்கும் என்று எம்பிஎஸ்ஏ ஃபேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட நூலகங்களில் உறுப்பினர்களாக இருக்கும் 5 வயது முதல் 12 வயதுக்கும் இடையில் உள்ளோர் பங்கேற்கலாம். ஒரு பட்டறையில் மொத்தம் 70 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.