PBT

பெட்டாலிங் ஜெயா பராமரிப்பு பணிகளுக்காக ரிம.12.95 மில்லியன் ஒதுக்கீடு

27 நவம்பர் 2019, 7:07 AM
பெட்டாலிங் ஜெயா பராமரிப்பு பணிகளுக்காக ரிம.12.95 மில்லியன் ஒதுக்கீடு

பெட்டாலிங் ஜெயா, நவ.27-

தனது அதிகாரத்திற்கு உட்பட்ட 38 பகுதிகளில் அடுத்த ஆண்டு பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் ( எம்பிபிஜே) 12.95 ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

சுற்றுச் சூழல் பசுமையாக இருப்பதை உறுதி செய்யவும் மக்களுக்கு ஓர் ஆரோக்கியமான சுற்றுச் சூழலை ஏற்படுத்தும் இந்நவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது சாயுத்தி பாக்கார் கூறினார்.

பொது பூங்கா மக்கள் ஓய்வெடுக்கும் வெட்ட வெளி பகுதிகளில் உள்ள நிழல் தரும் மரங்களைப் பராமரிப்பது, புற்கள் வெட்டுவது மாற்றும் குப்பைக் கூளங்களைச் சுத்தம் செய்வது இந்த பராமரிப்பு நடவடிக்கைகளில் அடங்கும் என்று எம்பிபிஜே கூட்டத்திற்கு தலைமையேற்ற போது அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், 15 பொது பூங்காக்களின் பராமரிப்பு சேவையின் தரத்தை உயர்த்துவதற்காக சிறப்பு ஒதுக்கீடாக 4.28 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடைமுறைகளின் வழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் அனைத்து அம்சங்களும் முழுமையான அளவில் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.