PBT

புக்கிட் ராஜா மாநாட்டு மண்டப நிர்மாணிப்பு 2021இல் நிறைவுறும்!

12 நவம்பர் 2019, 2:30 AM
புக்கிட் ராஜா மாநாட்டு மண்டப நிர்மாணிப்பு 2021இல் நிறைவுறும்!

கிள்ளான், நவ.12-

புக்கிட் ராஜா மாநாட்டு மண்டப நிர்மாணிப்புக்காக 13 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் எனறு கணிக்கப்பட்டுள்ள இதன் நிர்மாணிப்பு பணியை ஷரிகாட் தெதுவான் அடாத்ஷா ஹட்சன் மேற்கொண்டு வருவதாக கிள்ளான் நகராண்மைக் கழகத் (எம்பிகே) தலைவர் டத்தோ முகமது யாசிட் பிடின் கூறினார்.

இக்கட்டத்தின் மாதிரி வடிவமைப்பை 25 நிறுவனங்கள் பரிந்துரைத்த வேளையில், தீவிர பரிசீலனைக்குப் பின்னர் அடாத்ஷா ஹட்சன் நிறுவனத்தின் பரிந்துரை தேர்வு பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

பண்டார் புக்கிட் ராஜாவில் இக்கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் இந்நிலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கிள்ளான் வட்டார ஓராங் காயா டத்தோ அப்துல் கனி பாத்தே மற்றும் ஷாரிக்காட் அடாத்ஷா ஹட்சனின் பிரதிநிதி டத்தோ அகமது டாவுட் அஸ்ஸாய்ன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.