சுபாங் ஜெயா, ஆக.21-
சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தால் (எம்பிஎஸ்ஜே) இழுத்துச் செல்லப்பட்ட வாகனங்களுக்குச் சொந்தக்காரர்கள் அவற்றை செப்டம்பர் மாதத்திற்குள் மீட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தவறினால். அவ்வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் என்று எம்பிஎஸ்ஜே கூறியது.
1974ஆம் ஆண்டு கால்வாய் பாதை மற்றும் கட்டட சட்டத்தின் பிரிவு 45(3) மற்றும் 133 ஆகியவற்றின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக இதுவரை 344 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன என்று எம்பிஎஸ்ஜே வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
வாகனங்களின் உரிமையாளர்கள் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி நோட்டிஸுகள் பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அபராதத் தொகையை செலுத்திவிட்டு வாகன உரிமை ஆவணங்களுடன் தங்கள் வாகனங்களை மீட்டுச் செல்லும்படி அவ்வறிக்கை நினைவுறுத்தியது..
வழங்கப்பட்டுள்ள காலக் கெடுவிற்குள் மீட்கப்படாத வாகனங்கள் எச்சரிக்கை ஏதுமின்றி ஏலத்தில் விடப்படும் என்றும் அது தெரிவித்தது.








