NATIONAL

தெ ஆர்ட் மார்க்கெட்’ ஓவியர்களின் கைவண்ணத்தில் அங்சானா அடுக்குமாடியில் சுவரோவியம்

9 ஆகஸ்ட் 2019, 7:46 AM
தெ ஆர்ட் மார்க்கெட்’ ஓவியர்களின் கைவண்ணத்தில் அங்சானா அடுக்குமாடியில் சுவரோவியம்

‘சுபாங், ஆக.9-

அங்சானா அடுக்குமாடி குடியிருப்பின் சுவரில் மெர்டேக்கா சுவரோவியம் வரையும் திட்டத்தில் “தெ ஆர்ட் மார்க்கெட்” குழுவைச் சேர்ந்த 10 ஓவியர்கள் பங்கேற்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

150,000 வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டமானது பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பதோடு பொது சொத்துக்களை மதிப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ மக்களின் கவனத்தை ஈர்க்கும் தனித் தன்மையை இந்த சுவரோவியம் கொண்டிருக்கும்” என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமட் மெந்தேக் கூறினார்.

“முப்பரிமாண ஓவியமான இது சுற்றுப் பயணிகளையும் கவர்வதோடு புகைப்பட கலையையும் ஊக்குவிக்கும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.