PBT

எம்பிகே : வாகன நிறுத்துமிட அபராதத் ] தொகைக்கு சிறப்பு கழிவு

30 ஜூலை 2019, 7:52 AM
எம்பிகே : வாகன நிறுத்துமிட அபராதத் ] தொகைக்கு சிறப்பு கழிவு

ஷா ஆலம், ஜூலை 30-

விரைவில் கொண்டாடப்படவிருக்கும் தேசிய தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 26 தொடங்கி செப்டம்பர் 8 வரையில், வாகன நிறுத்துமிட அபராதக் கட்டணத்திற்கு சிறப்பு கழிவு வழங்கும் இயக்கம் ஒன்றை கிள்ளான் நகாரண்மைக் கழகம் நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாகன நிறுத்துமிட அபராதத் தொகையை 15 வெள்ளியாக குறைக்கவிருப்பதோடு பல்வேறு குற்றங்களுக்கான அபராதத் தொகையை 200 வெள்ளியாகவும் குறைக்கவிருப்பதாக அதன் தலைவர் யாசிட் பிடின் கூறினார்.

“பொது மக்கள் தங்களின் அபராதத் தொகையை தலைமையகத்தின் முகப்பிடத்திலும் ஜாலான் தெங்கு கிளானாவில் உள்ள எம்பிகே கிளையின் முகப்பிடத்திலும் சரிபார்த்துக் கொள்ளலாம்” என்றார் அவர்.

“அதே வேளையில், தங்களின் அபராதங்களை தலைமையகத்திலும் ஜாலான் தெங்கு கிளானா, ஜாலான் ராயா பாராட், ஜாலான் மேரு பாசார் பெசார், பேருந்து நிலையம், டேவான் மேரு மற்றும் பெக்கான் காப்பாரில் உள்ள எம்பிகே கிளை அலுவலகங்களிலும் செலுத்தலாம்” என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.