SELANGOR

வியாபார உரிமம் ரத்து; வியாபாரிகள் மகிழ்ச்சி

5 டிசம்பர் 2018, 6:54 AM

ஷா ஆலம், டிசம்பர் 5:

2019-ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் வியாபார உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் சிறுதொழில் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்றம், பொது போக்குவரத்து மற்றும் புதிய கிராம மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் தெரிவித்தார். சிறுதொழில் வணிகர்கள் தங்களது பொருளாதார வளத்தை பெருக்க இது வழிவகை செய்யும் என்று அவர் கூறினார்.

" நேற்று மந்திரி பெசார் அமிரூடின் ஷாரியின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன். மலிவு விலை வீடுகளுக்கான மதிப்பீடு வரி விலக்கு மற்றும் கிராம வீடுகளுக்கு வரி விலக்கு ஆகியவை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். ஆகவே, சிலாங்கூர் மாநில மக்களாகிய நாம் தொடர்ந்து மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்துக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.