SELANGOR

அஸ்மின் அலி, துன் மகாதீரை சந்தித்தார் Mo

19 மே 2018, 5:49 AM
அஸ்மின் அலி, துன் மகாதீரை சந்தித்தார்   Mo
அஸ்மின் அலி, துன் மகாதீரை சந்தித்தார்   Mo

புத்ரா ஜெயா, மே 19:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இன்று மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை சந்தித்து புதியதாக தம்மை நியமனம் செய்த மலேசிய பொருளாதார நலன் அமைச்சு தொடர்பில் விளக்கம் கேட்டறிந்தார். நண்பகல் 12 மணியளவில் பிரதான தலைமைத்துவ வாரியத்திற்கு வருகை தந்து மகாதீரை சந்தித்தார். கடந்த மே 10-இல் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு இந்த இடத்தையே அலுவலகமாக மகாதீர் பயன்படுத்தி வருகிறார்.

நேற்று செய்தியாளர்களிடம், இன்று  பிரதமரை சந்தித்து புதிய அமைச்சின் பொறுப்புகளை பற்றி அறிய இருப்பதாக கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அஸ்மின் அலி சிலாங்கூர் மன்னர், சுல்தான் ஷாராஃபூடின் இட்ரிஸ் ஷாவை சந்தித்து தனது பணியை தொடர்வதா அல்லது மத்திய அமைச்சராக செல்வதா என்று முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.