PBT

'ஓப்ஸ் பெனியாகா': எட்டு வெளிநாட்டவர்கள் கைது

8 பிப்ரவரி 2018, 1:25 AM
'ஓப்ஸ் பெனியாகா':  எட்டு வெளிநாட்டவர்கள் கைது
'ஓப்ஸ் பெனியாகா':  எட்டு வெளிநாட்டவர்கள் கைது

ஷா ஆலம், பிப்ரவரி 8:

ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) சுபாங் நகரத்தில், தாமான் சுபாங் ஜாசா 3-வில் நடத்திய வெளிநாட்டு வணிகர்கள் மீதான அமலாக்க நடவடிக்கையில் எட்டு வெளிநாட்டினரை கைது செய்தனர். சிலாங்கூர் குடிநுழைவு இலாகாவினர் 162 வெளிநாட்டு வணிகர்களிடம்  நடத்திய சோதனையில் எட்டு பேர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

எம்பிஎஸ்ஏ-வின் அமலாக்க பிரிவு அதிகாரி ரோஸாய்டி அமாட் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கை, வணிக மையங்கள், வெளிநாட்டினர் மற்றும் வணிக உரிமம் இல்லாமல் இயங்கும் கடைகள் மீது குறி வைத்து நடத்தப்பட்டது என்று அகப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

 

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் எம்பிஎஸ்ஏ-வின் அமலாக்க பிரிவு, வணிக உரிமம் பிரிவு, தொழில்முறை மற்றும்  தொடர்பு பிரிவு மற்றும் சிலாங்கூர் குடிநுழைவு இலாகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.