சந்தா கிளாரா, நவ 12 : தொழில்நுட்ப ஜாம்பவானான என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைவர், தலைமை செயல் முறை அதிகாரி, இயக்குநர் வாரிய உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து, ஜென்சன் ஹுவாங் விலகியிருப்பதாக, அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு தெரிவித்தது.
மேலும், தலைமை நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹுவாங்கின் பதவி விலகல் செய்தி வெளியான சற்று நேரத்தில் அமெரிக்கப் பங்குச் சந்தைகள் திறக்கப்பட்டபோது, அந்நிறுவனத்தின் பங்குகள் ஆரம்பத்தில் 13%-க்கும் அதிகமாகச் சரிந்த நிலையில், பின்னர் ஓரளவு மீண்டன.
தமது சொந்த நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு நிர்வாகியுடன் அவருக்கு இரண்டாவது தகாத உறவு இருந்ததாக 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடன் தனக்குத் தகாத உறவு இருந்ததை ஞாயிற்றுக்கிழமையன்று ஹுவாங் ஒப்புக்கொண்டார்.
என்விடியா நிறுவனத்தை மிகப்பெரிய வெற்றிக்கு வழிநடத்திய ஹுவாங், இறுதியில் தனது காதல் வாழ்க்கையால் வீழ்ந்திருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே, 63 வயதான ஹூவாங்கின் பதவி விலகலால், செயற்கை நுண்ணறிவு (AI) துறை அதன் மிகப்பெரிய பலத்தை இழந்திருப்பதோடு, அவர் ஒரு மாபெரும் AI சக்தியாக உருவாக்கிய சில்லு தயாரிப்பு நிறுவனத்தின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஹுவாங் ஒப்புக்கொண்ட தகாத உறவு குறித்து என்விடியா நிறுவனமும், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யும் (FBI) ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





