மொரிஷியஸில் கஞ்சாவுடன் பிடிபட்ட மலேசியர்களில் இருவர் தம்பதியர்

10 நவம்பர் 2026, 7:48 AM
மொரிஷியஸில் கஞ்சாவுடன் பிடிபட்ட மலேசியர்களில் இருவர் தம்பதியர்

ஷா ஆலாம், நவ 10 : மொரிஷியஸ் நாட்டில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி 76.14 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூன்று மலேசியர்களில் இருவர் கணவன் மனைவி என்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்களுக்கு, ஒவ்வொரு போதைப்பொருள் பையைக் கடத்துவதற்கு தலா 1,000 ரிங்கிட் கூலி பேசப்பட்டதாக, புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்தார்.

பினாங்கில் இருந்து வந்த 22 மற்றும் 18 வயதுடைய இந்த இளம் தம்பதியர் 'ரெட்நோட்' செயலி மூலம் கடத்தல் கும்பலால் ஈர்க்கப்பட்டு, பின்னர் டெலிகிராம் வழியாக தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களது விமான டிக்கெட் மற்றும் தங்கும் செலவுகளைக் கடத்தல் கும்பலே ஏற்றுக்கொண்டதுடன், இவர்களை முதலில் பாங்காக் சென்று அங்கு போதைப்பொருள் பைகளைப் பெற்றுக்கொண்டு, துபாய் வழியாக மொரிஷியஸ் செல்லுமாறு பணித்துள்ளனர்.

இவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 'Life360' செயலியைப் பயன்படுத்துமாறும் அக்கும்பல் கட்டாயப்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் சபாவைச் சேர்ந்த 30 வயது ஆடவர் ஆவார். சிங்கப்பூரில் பணிபுரியும் இவர், பேஸ்புக் வேலைவாய்ப்பு விளம்பரம் மூலம் இந்த மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளார்.

மொரிஷியஸ் அனைத்துலக விமான நிலையத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டபோது, இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் 98 லட்சத்து 70,00 ஆயிரம் ரிங்கிட்டாகும்.

பிடிபட்ட மூன்று மலேசியர்களுக்கும் இதற்கு முன் எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லை என்பது சோதனையில் தெரிய வந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.