நடுரோட்டில் பட்டாசு வெடிப்பு: நால்வர் கைது, மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு

9 நவம்பர் 2026, 3:36 AM
நடுரோட்டில் பட்டாசு வெடிப்பு: நால்வர் கைது, மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு

ஷா ஆலாம், நவ 9 : ஜொகூர் பாரு, ஸ்கூடாயில் தாமான் நேசா, சாலை சமிக்ஞை சந்திப்பின் நடுவே ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்த சம்பவம் தொடர்பில் நான்கு உள்ளூர் இளைஞர்களைப் போலீசார் கைது செய்தனர்.

நேற்று இரவு சுமார் 7:30 மணியளவில் ஸ்கூடாய் பகுதியைச் சுற்றி நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது 16 முதல் 25 வயதுக்குட்பட்ட அந்த நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் அஸ்ரோல் அனுவார் நோர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் உடனடியாகச் செயல்பட்டு இந்த அதிரடி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பிடிபட்ட இளைஞர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில், அவர்களுக்கு எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை என்பதும், சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுப்புக் காவலில் வைப்பதற்கான ஆணையைப் பெற இன்று ஜொகூர் பாரு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.

இந்த வழக்கு தற்போது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 286 (வெடிபொருட்களைக் கொண்டு பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அலட்சியமாகச் செயல்படுதல்) மற்றும் 1987 - ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 48(1) (மற்ற வாகனமோட்டிகளுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பொதுச் சாலையில் வாகனங்களை நிறுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் மூன்று நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொது மக்கள் ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் 07-5563122 ஹாட்லைன் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.