பிரிக்பீல்ட்ஸ் உணவகத்தில் தீ : இரு பெண்கள் காயம்

8 நவம்பர் 2026, 10:31 AM
பிரிக்பீல்ட்ஸ் உணவகத்தில் தீ : இரு பெண்கள் காயம்

கோலாலம்பூர், நவ 8 : பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தன் பகுதியில் அமைந்துள்ள இரு அடுக்கு உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் காயமடைந்தனர்.

அதிகாலை 3.04 மணிக்கு இந்த விபத்து குறித்த அவசர அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கை மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்தத் தீ விபத்தில் உணவகத்தின் கீழ் தளம் முற்றிலும் அழிந்ததுடன், மேல் தளம் 50 விழுக்காடு சேதமடைந்தது.

"இந்த விபத்தில் 24, 34 வயதுடைய இரு பெண்களுக்கு வலது கையில் காயங்கள் ஏற்பட்டன.

மேலும் ஒருவருக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டது.

அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர்கள் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு (HKL) அனுப்பி வைக்கப்பட்டனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

ஹங் துவா, பந்தாய் மற்றும் செபுத்தே தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 35 பணியாளர்கள் மற்றும் 9 தீயணைப்பு வாகனங்கள் இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணமும், சேத மதிப்பீடும் இன்னும் விசாரணையில் உள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.