79 வயது மூதாட்டியைத் தள்ளி விட்ட சுயேட்சை வேட்பாளர் கைது

25 செப்டெம்பர் 2026, 8:51 AM
79 வயது மூதாட்டியைத் தள்ளி விட்ட சுயேட்சை வேட்பாளர் கைது

கோலாலம்பூர், செப் 25 - கடந்த வெள்ளிக்கிழமை இங்குள்ள பழைய கிள்ளான் சாலையின் ஓயுஜி (OUG) பகுதியில் 79 வயது மூதாட்டி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில், 15-ஆவது பொதுத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளர் ஒருவரைப் போலிசார் கைது செய்தனர்.

முன்னாள் சிலாங்கூர் ஹாக்கி வீராங்கனையான அந்த மூதாட்டி, சாக்கடைக்குள் தள்ளிவிடப்பட்டதில் அவருக்கு தலை, இடது கை மற்றும் முதுகுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டதாக தி வைப்ஸ் (The Vibes) செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அச்சம்பவம் காலை 10.30 மணியளவில் கடைத் தொகுதிக்கு வெளியே நடந்ததாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ஹூ சாங் ஹூக் ( Hoo Chang Hook) தெரிவித்தார்.

தொடக்க விசாரணையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி கடைக்குச் சென்றபோது, சம்பந்தப்பட்ட முன்னாள் தேர்தல் வேட்பாளர் அவரைப் பின்தொடர்ந்துள்ளார் என்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவர் கடையை விட்டு வெளியேறியபோது, அங்கு நின்றிருந்த அந்நபர் அவரைத் தள்ளி விட்டுச் சென்றார். இதையடுத்து அந்த மூதாட்டி சாக்கடைக்குள் விழுந்தார்.

சம்பவத்தன்று மதியம் 12.37 மணிக்கு பாதிக்கப்பட்டவரின் நண்பர் அளித்த புகாரின் பேரில், பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்தனர்.

விசாரணையில் மூதாட்டியைத் தள்ளிய நபர் தனது செயலுக்கு நியாயமான விளக்கத்தை அளிக்கத் தவறினார். மேலும், அவருக்குப் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தனிப்பட்ட முறையில் தெரியாது என்றும் போலீஸ் கூறியது.

பின்னர் ஒரு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அந்நபர், மனநல சிகிச்சை பெற உத்தரவிடுமாறு கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.