உறவுகளை வலுப்படுத்தி, ஒற்றுமையின் உதாரணமாக திகழும் தீபாவளி கொண்டாட்டம்

8 நவம்பர் 2026, 9:20 AM
உறவுகளை வலுப்படுத்தி, ஒற்றுமையின் உதாரணமாக திகழும்  தீபாவளி கொண்டாட்டம்
உறவுகளை வலுப்படுத்தி, ஒற்றுமையின் உதாரணமாக திகழும்  தீபாவளி கொண்டாட்டம்
உறவுகளை வலுப்படுத்தி, ஒற்றுமையின் உதாரணமாக திகழும்  தீபாவளி கொண்டாட்டம்

ஷா ஆலாம், நவ 8 : மாநிலத் தலைவர்களிடையே பிணைப்பை வலுப்படுத்துவதற்கும், மாநிலத்தின் பல்லின மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கும் ஒரு சிறந்த தளமாக, சிலாங்கூர் மாநில செயற்குழுவின் (MMKN) தீபாவளி கொண்டாட்டம் அமைவதாக தெரிவித்தார், மனிதவள வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு .

இன்று ஆட்சிக் குழுவினரின் குடியிருப்பு வளாகத்தில், தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அவர், இந்த எளிமையான கொண்டாட்டம் , மதம், இனம் மற்றும் நம்பிக்கைகளில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், மாநிலத் தலைவர்களிடையே நிலவும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது என கூறினார்.

சிலாங்கூரின் அடையாளமாகத் திகழும் பன்முகத்தன்மையை மதிப்பதும், நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்த வருடாந்திர பாரம்பரியம் பொதுமக்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் உயர்மட்டத் தலைவர்களிடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கான இந்த வருடாந்திர பாரம்பரியம், மதம் - இன வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இந்தக் கொண்டாட்டத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத் துறைகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

எதிர்வரும் சனிக்கிழமை (நவம்பர் 14) நடைபெறவுள்ள மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டம் குறித்துக் கருத்துரைத்த பாப்பாராயுடு, கிள்ளானில் உள்ள படாங் செட்டி என்று அழைக்கப்படும் டத்தாரான் கிள்ளானில் நடைபெறும் இந்த விழாவில், பல ஆலயங்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகளுக்கு மாநில அரசின் நிதியுதவிகள் வழங்கப்படும் என்று கூறினார்.

அதேபோன்று, வழிபாட்டுத் தலங்களின் கட்டுமானம் தொடர்பான பல முக்கிய விவகாரங்கள் குறித்து எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நிகழ்வில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநில அளவிலான கொண்டாட்டத்தில் 10,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஒற்றுமையின் ஒளி, வளமான சிலாங்கூர்" என்ற கருப்பொருளில், இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ள இக்கொண்டாட்டத்தில், அனைத்து இன மக்களுக்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன், தீபாவளி அன்பளிப்பும் வழங்கப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.