தீபாவளி மகிழ்ச்சி: கோத்தா கெமுனிங்கில் ஆதரவற்ற சிறுவர்களுக்குப் புத்தாடை, பண அன்பளிப்பு

3 நவம்பர் 2026, 2:24 AM
தீபாவளி மகிழ்ச்சி: கோத்தா கெமுனிங்கில் ஆதரவற்ற சிறுவர்களுக்குப் புத்தாடை, பண அன்பளிப்பு
தீபாவளி மகிழ்ச்சி: கோத்தா கெமுனிங்கில் ஆதரவற்ற சிறுவர்களுக்குப் புத்தாடை, பண அன்பளிப்பு
தீபாவளி மகிழ்ச்சி: கோத்தா கெமுனிங்கில் ஆதரவற்ற சிறுவர்களுக்குப் புத்தாடை, பண அன்பளிப்பு

கோத்தா கெமுனிங், நவ.3: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ், பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களுடன் சிறப்புச் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து பண்டிகைக் கொண்டாட்டத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியின்போது சிறார்களுக்குத் தீபாவளி புத்தாடைகள் வாங்கிக் கொடுக்கப்பட்டதுடன், அவர்களுக்குப் பண அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன. மேலும், அனைவரும் ஒன்றாகக் உணவகத்தில் இரவு உணவருந்தி மகிழ்ந்தனர்.

சிறுவர்களுடன் நேரடியாக உரையாடிய பிரகாஷ், அவர்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களையும் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்தார். பண்டிகைக் காலத்தில் அவர்களுக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை ஏற்படுத்துவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது.

மேலும், சிறுவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்குவதைவிட, அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு, அக்கறையையும் அன்பையும் வெளிப்படுத்துவதுதான் அதிக மதிப்புமிக்கது என்றார் பிரகாஷ்.

இதற்கிடையில், சிறார்களுக்கான புத்தாடைகள் உள்ளூர் வர்த்தக நிறுவனமான Raaji Silk Palace மூலம் கொள்முதல் செய்யப்பட்டதுடன், இரவு உணவும் உள்ளூர் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் வழியாகச் சிறுவர்களுக்கான உதவியுடன் உள்ளூர் வணிகர்களுக்கும் ஆதரவளிக்கப்பட்டது.

சமூக நலப் பணிகளுடன் உள்ளூர் வர்த்தகர்களின் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த முன்னெடுப்பு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.