புலாவ் கெத்தாமில் உரிமம் இன்றி இயங்கிய பயணிகள் படகு தடுத்து நிறுத்தப்பட்டது

1 நவம்பர் 2026, 4:44 AM
புலாவ் கெத்தாமில் உரிமம் இன்றி இயங்கிய பயணிகள் படகு தடுத்து நிறுத்தப்பட்டது

கிள்ளான் துறைமுகம், நவ 1 : புலாவ் கெத்தாம் கடற்பகுதியில் சரக்குக் கப்பல் உரிமத்தின் கீழ் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்பு (MMEA) நேற்று தடுத்து நிறுத்தியது.

சுங்கை லீமாவிலிருந்து புலாவ் கெத்தாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த படகை, நேற்று காலை 10:50 மணியளவில் சிலாங்கூர் கடல்சார் அதிகாரிகள் தங்களது வழக்கமான ரோந்துப் பணியின் போது இடைமறித்தனர்.

அந்த படகை 70 வயதுடைய உள்ளூர் முதியவர் ஒருவர் இயக்கி வந்தார்.

அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்த படகில் செல்லுபடியாகும் உரிமம் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதும், சரக்கு படகாக பதிவு செய்யப்பட்டு விதிமுறைகளை மீறி பயணிகள் படகாக இயக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

மேலும், படகை இயக்கிய மாலுமியிடம் கடல்சார் துறை வழங்கிய தகுதிக்கான சான்றிதழ் (COC) ஏதும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.

தற்போது இந்த சம்பவம் 1952 -ஆம் ஆண்டின் வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தடுத்து நிறுத்தப்பட்ட படகும் அதன் மாலுமியும் சிலாங்கூர் கடல்சார் கப்பல் தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விதிமுறைகளை மீறி படகுகளை இயக்குவது சட்டப்படி குற்றம் என்பதோடு பயணிகளின் உயிருக்கும் ஆபத்தானது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.