LED திரைகள் ஹேக் செய்யப்பட்டு தகாத காட்சிகள் ஒளிபரப்பு: போலீசார் விசாரணை

30 அக்டோபர் 2026, 2:20 PM
LED திரைகள் ஹேக் செய்யப்பட்டு தகாத காட்சிகள் ஒளிபரப்பு: போலீசார் விசாரணை

குளுவாங், அக் 30 - ஜொகூர்,குளுவாங்கில், எட்டு சாலையோர எல்இடி (LED) திரைகள் ஹேக் செய்யப்பட்டு, அவற்றில் ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் இரு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர்.

42 வயதுடைய நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பஹ்ரின் நோஹ் கூறினார்.

அவரது ஊழியர்கள் இந்த ஹேக்கிங் சம்பவம் குறித்து அவருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட திரைகளில் ஆபாசக் காட்சிகள் ஓடுவதைக் காட்டும் படங்களும் வீடியோக்களும் வாட்ஸ்அப் வழியாக அந்தப் புகார்தாரருக்குக் கிடைத்துள்ளன.

உடனடியாக அவர் எல்இடி திரை விநியோகிப்பாளரைத் தொடர்பு கொண்டு விபரத்தை உறுதிப்படுத்திய பின்னர், காட்சிகள் ஒளிபரப்பப்படுவதைத் தடுக்க மின்சார விநியோகத்தைத் துண்டித்துள்ளார்.

இன்று அதிகாலை, குளுவாங் நகராட்சி மன்றம் (MPK) இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறியவும், தங்களின் இணைய பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தவும் எல்இடி திரை விற்பனையாளருடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்தது.

மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அந்த நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து எல்இடி திரைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் o) ஜாஃப்னி ஷுகோர் தெரிவித்தார்.

இந்த ஹேக்கிங் சம்பவத்தால் தாசிக் குளுவாங் சதுக்கம் , தாமான் இந்தான் மற்றும் கஹாங் செல்லும் வழியில் உள்ள பல பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த திரைகள் பாதிக்கப்பட்டன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.