படிவம் 6 மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் செமஸ்டரிலிருந்து RM2,500 நிதியுதவி

25 அக்டோபர் 2026, 8:06 AM
படிவம் 6  மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் செமஸ்டரிலிருந்து RM2,500 நிதியுதவி

நிபோங் திபால், அக் 25 : 2027 வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தப்படி , படிவம் ஆறு மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் செமஸ்டரிலிருந்து 2,500 ரிங்கிட் வாழ்க்கைச் செலவுப் படியைப் பெறுவார்கள் என கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபத்லினா சிடேக் தெரிவித்தார்.

அனைத்து படிவம் ஆறு மாணவர்களின் பதிவு நடவடிக்கைகள் முடிந்தவுடன், அவர்களின் முதல் செமஸ்டரிலேயே இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

நிபோங் திபால் நாடாளுமன்ற அளவிலான ‘ஜெலாஜா நெகாராக்கு: அக்கு காசிஹ் மலேசியா’ திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அந்த உதவித்தொகை மூன்று செமஸ்டர் காலப் படிப்பிற்குள் தலா 800 ரிங்கிட் என்ற வீதத்தில் படிப்படியாக வழங்கப்படும் என்று அவர் விளக்கினார்.

இந்த நிதியுதவியானது படிவம் ஆறு மாணவர்களின் கற்றல் தேவைகளுக்கு ஆதரவாக இருப்பதோடு, எஸ்டிபிஎம் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உதவியின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 90,000 படிவம் ஆறு மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைpendidikan

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.