ஷா ஆலம், அக். 19 – கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஆறு இந்திய தொழில்முனைவோர், சிலாங்கூரின் ISEED திட்டத்தின் மூலம், தங்களின் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கான உபகரண உதவிகளைப் பெற்றனர்.
அந்த உதவிப் பொருட்களை இன்று, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் எடுத்து வழங்கினார்.

இத்திட்டத்தின் மூலம், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் தகுதியான தொழில்முனைவர்கள் அதிகபட்சம் 10,000 ரிங்கிட் வரையிலான வியாபார உபகரண உதவியைப் பெற முடியுமென அவர் குறிப்பிட்டார்.
இந்த உதவி தொழில்முனைவோர் தங்களது வியாபாரத்தை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், சேவையின் தரத்தை உயர்த்தவும், வருமானத்தைப் பெருக்கவும் உதவுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொழில்முனைவோருக்கான பொருளாதார வாய்ப்பினை அதிகரித்து, இந்திய சமூகத்தை போட்டியாற்றல் மிக்க ஒரு சமுதாயமாக மாற்றும் நோக்கத்தையும் இந்த ஐ -சீட் திட்டம் கொண்டுள்ளது.







