கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமான் கால்வாய் ஆண்டிற்கு 4 முறை சுத்தம் செய்யப்படுகிறது

17 அக்டோபர் 2026, 4:24 AM
கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமான் கால்வாய் ஆண்டிற்கு 4 முறை   சுத்தம் செய்யப்படுகிறது

ஷா ஆலாம், அக் 17 - கிள்ளான், பண்டார் சுல்தான் சுலைமானில் உள்ள பெரிய சாக்கடையை சுத்தம் செய்யும் பணிகளை, கிள்ளான் அரச மாநகர் மன்றம்(MBDK), கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி முதல் படிப்படியாகத் தொடங்கியுள்ளது.

அப்பகுதியில் உள்ள பெரிய வாய்க்காலைப் பராமரிக்கும் பணியின் ஒரு பகுதியாக, இதற்கு முன் நியமிக்கப்பட்ட குத்தகையாளர்களால் இப்பணிகள் கைமுறையாக (manual) செய்யப்பட்டு வந்ததாக கிள்ளான் அரச மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

மேலும், துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிக்குள் கனரக வாகனங்கள் மற்றும் துப்புரவு இயந்திரங்கள் நுழைவதற்கு ஏதுவாக, அங்குள்ள வேலியைத் தற்காலிகமாகத் திறந்து வைக்குமாறு சுற்றுச்சூழல் சேவைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பெரிய வாய்க்கால் துப்புரவுப் பணிகள் சுழற்சி முறை அட்டவணையின்படி ஆண்டிற்கு நான்கு முறை செயல்படுத்தப்படுவதாக கிள்ளான் அரச மாநகர் மன்றம் விளக்கியுள்ளது.

குப்பைகள் நிறைந்து காணப்படும் இந்த வாய்க்கால் குறித்த விவகாரம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் கவனத்தை ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இப்புகாரை வழங்கிய பொதுமக்களின் அக்கறைக்கு நன்றி தெரிவித்த கிள்ளான் அரச மாநகர் மன்றம், குடியிருப்பாளர்களின் நலனுக்காக நகராட்சி சேவைகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளது.

அதே வேளையில், வடிகால் அமைப்பில் மீண்டும் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, பொதுமக்களும் குப்பைகளை ஆங்காங்கே அல்லது சாக்கடைகளில் வீச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.