சிலாங்கூரில் அனைத்துப் பள்ளிகளும் நாளை வழக்கம்போல் செயல்படும் : கல்வித் துறை

14 அக்டோபர் 2026, 8:19 AM
சிலாங்கூரில் அனைத்துப் பள்ளிகளும் நாளை வழக்கம்போல் செயல்படும் : கல்வித் துறை
சிலாங்கூரில் அனைத்துப் பள்ளிகளும் நாளை வழக்கம்போல் செயல்படும் : கல்வித் துறை

ஷா ஆலாம், அக் 14 : சிலாங்கூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை (அக்டோபர் 15) வழக்கம் போல் செயல்படுமென சிலாங்கூர் மாநில கல்வித் துறை அறிவித்துள்ளது.

தற்போதைய புகைமூட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பள்ளிக்கு வரும் மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

தங்களின் பிள்ளைகளின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கத் தேர்வு வழங்கப்படுகிறது.

எனினும் பிள்ளைகள் பள்ளிக்கு வராதது குறித்து , அவர்கள் பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று கல்வித் துறை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இன்று மதியம் 2 மணி நிலவரப்படி, சிலாங்கூரில் ஐந்து பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீட்டு (IPU) அளவைப் பதிவு செய்துள்ளன.

இதில் கிள்ளான் பகுதி அதிகபட்சமாக 177 புள்ளிகளையும், ஜோஹான் செத்தியா 176 புள்ளிகளையும் பதிவு செய்துள்ளன.

ஷா ஆலாம் மற்றும் பந்திங் ஆகிய பகுதிகள் தலா 163 புள்ளிகளையும், பெட்டாலிங் ஜெயா 156 புள்ளிகளையும் பதிவு செய்துள்ளன.

அதே வேளையில், கோலா சிலாங்கூர் பகுதி 92 புள்ளிகளுடன் மிதமான காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.