மாற்று மதச் சடங்குகளைச் செய்ததாக சந்தேகம்: அலிஃப் டேனியலும் தாயாரும் JAIS-சால் கைது

13 அக்டோபர் 2026, 9:45 AM
மாற்று மதச் சடங்குகளைச் செய்ததாக சந்தேகம்: அலிஃப் டேனியலும்  தாயாரும் JAIS-சால்  கைது
மாற்று மதச் சடங்குகளைச் செய்ததாக சந்தேகம்: அலிஃப் டேனியலும்  தாயாரும் JAIS-சால்  கைது

ஷா ஆலாம், அக் 13: மாற்று மதச் சடங்குகளைச் செய்ததாக சமூக ஊடகங்களில் வைரலான 21 வயது வாலிபரை , சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமயத் துறை (JAIS) கைது செய்தது.

அந்நபர் இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு முரணான செயலில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உதவ கைது செய்யப்பட்டார்.

இன்று,கோலாலம்பூரில் மதியம் 1 மணியளவில் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமயத் துறையின் (JAWI) அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அந்த வாலிபர், பின்னர் மேல் விசாரணைக்காக இங்குள்ள சுல்தான் இத்ரிஸ் ஷா கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

அவரது 52 வயது தாயாரும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.

அலிஃப் டேனியல் எனும் அந்த வாலிபரும், அவரது தாயாரும் 1995-ஆம் ஆண்டு சிலாங்கூர் ஷரியா குற்றவியல் சட்ட விதிகளின் பிரிவு 4 மற்றும் பிரிவு 10-இன் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்று ஜாய்ஸ் இயக்குனர் டத்தோ முகமட் ஷாஜிஹான் அஹ்மாட் தெரிவித்தார்.

இந்த விசாரணைக்கு உதவ மேலும் குறைந்தபட்சம் 14 நபர்களை அழைக்க ஜாய்ஸ் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

"ஷா ஆலாம் கீழ்நிலை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது ஆணை அடிப்படையில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஜாய்ஸ் அமைப்பு இவ்விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. அதிகார வரம்பு, சட்டம் மற்றும் வழக்கின் உண்மைகளின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை அது உறுதி செய்யும்.

எனவே, பொதுமக்கள் இது குறித்து எந்தவொரு யூகங்களையும் பரப்ப வேண்டாம் எனவும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிராமல் அதிகாரப் பூர்வ விசாரணை முழுமையடைவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.