கோலாலம்பூர், அக் 20- தீபாவளி பெருநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மற்றும் பல மூத்த தலைவர்கள் இன்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் இல்லத்தில் நடைப்பெற்ற திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக்கொண்டனர்.
தனது முகநூல் பதிவில், இந்த விஜயத்தின் நோக்கம் பல இன மக்களிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் உணர்வை கொண்டாடுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் ஒரு பதிவில், ‘ஒளி பெருநாள்’ எனப்படும் இந்த தீபாவளி பண்டிகையை மக்கள் ஒற்றுமையை வளர்க்கவும், தேவையுள்ளவர்களை அன்புடன் அணுகவும், நாடு ஒன்றுபட்ட குடும்பமாக வலுப்பெறவும் பயன்படுத்துமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
அவர் மேலும் கூறியதாவது, “பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மத நம்பிக்கைகளால் செழித்த நம் நாட்டில், பரஸ்பர மரியாதையும் புரிந்துணர்வும் எப்போதும் பேணப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று வழியுருத்தினார்.