பீடோர் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: ஆடவருக்கு தோள்பட்டையில் காயம்

30 செப்டெம்பர் 2026, 6:13 AM
பீடோர் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: ஆடவருக்கு தோள்பட்டையில் காயம்

தாப்பா, செப் 30 - நேற்று தாப்பா, பீடோர் செண்ட்ரல்-லில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், துப்பாக்கி வைத்திருந்த இரு நபர்கள் சுட்டதில், 41 வயது ஆடவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர், காரில் நேற்று மாலை 6.08 மணியளவில் சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவரது காருக்கு முன்பு கருப்பு நிற ஹோண்டா சிட்டி கார் வழிமறித்து நின்றதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ மொஹமட் அல்வி சய்னால் அபிடின் தெரிவித்தார்.

" ஹொண்டா சிட்டியிலிருந்து வெளியேறிய இருவர், பாதிக்கப்பட்ட நபரின் தொயோத்தா லெண்ட் குரூசர் காரை நோக்கி சில முறை சுட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பியோடினர்.

சம்பவத்தின் போது அந்த தொயோத்தா காரில் மேலும் ஐவர் இருந்தனர். அவர்கள் அனைவரும் காயங்கள் இன்றி உயிர் தப்பினர் " என டத்தோ மொஹமட் அல்வி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இவ்வேளையில், காயமடைந்த நபர் ராஜா பெர்மாய்சூரி பய்னூன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தில் 9mm லுகர் குண்டும், அதே அளவிலான நான்கு காலித் தோட்டாக்களும், குண்டுத் துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வாகனத்தில் சில குண்டுத் துண்டுகளும், குண்டுப் பாய்ந்ததுக்கான அடையாளங்களும் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.