2,000க்கும் மேற்பட்ட APM தன்னார்வலர்கள் பேரிடர் மீட்புப் பணிகளுக்குத் தயார்

30 செப்டெம்பர் 2026, 1:30 AM
2,000க்கும் மேற்பட்ட APM தன்னார்வலர்கள் பேரிடர் மீட்புப் பணிகளுக்குத் தயார்

ஷா ஆலாம், செப்.30 — சிலாங்கூரில் பேரிடர் அல்லது அவசரநிலை ஏற்பட்டால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு 2,000க்கும் மேற்பட்ட மலேசிய தற்காப்புப் படை (APM) தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளனர்.

இந்தப் படையினர் APM சிலாங்கூர் நிரந்தர அதிகாரிகளின் மேற்பார்வையில் உள்ளனர். இவர்கள் பேரிடர் அல்லது அவசரநிலையின் தன்மைக்கு ஏற்ப தேவையான இடங்களுக்கு உடனடியாக அனுப்பப்படுவர் என சிலாங்கூர் APM இயக்குநர் ஒய்.எஸ். கர்னல் (PA) ஃபஸ்லிஸ்யா முஸ்லிம் தெரிவித்தார்.

தளவாடங்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பில் சில கட்டுப்பாடுகளை நாம் எதிர்கொள்ளக்கூடும். எனினும், அருகிலுள்ள மாநிலங்களுடன் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைப்பின் மூலம் அந்தக் குறைபாடுகளைச் சமாளிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை என்பது மீட்பு நிறுவனங்களை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது. பொதுமக்களும் அவசரநிலைகளின்போது சுயமாகச் செயல்படும் அடிப்படை அறிவையும் திறனையும் பெற்றிருக்க வேண்டும் என்றும் ஃபஸ்லிஸ்யா வலியுறுத்தினார்.

பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களின் தயார்நிலையை அதிகரிப்பதும் APM-இன் முக்கியப் பொறுப்புகளில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.

அவற்றில் ‘Kampung Siaga’ திட்டம், பொதுமக்களுக்கான பயிற்சிகள் மற்றும் பேரிடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்குகின்றன.

பேரிடர் ஏற்படும் நேரத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேலும் பயனுள்ள வகையில் மேற்கொள்வதற்கும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை விரிவுபடுத்துவதற்கும் APM, அரசாங்க நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது ஆகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.