சவால்களை எதிர்கொள்ள சிலாங்கூர் ஹராப்பான் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது

27 செப்டெம்பர் 2026, 8:18 AM
சவால்களை எதிர்கொள்ள சிலாங்கூர் ஹராப்பான் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது

ஷா ஆலம், செப். 27 – சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தனது 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரையிலான புதிய நிர்வாகக் குழுவை அறிவித்துள்ளது.

இது சிலாங்கூரில் மடாணி அரசாங்கத்தின் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள், நேற்று ஷா ஆலாமில் நடைபெற்ற சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பானின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இடம்பெற்றன.

இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தலைவரும் சிலாங்கூர் மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.

சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் செயலாளர் முகமட் கம்ரி கமருடின் கூறுகையில், இக்கூட்டம் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய தளமாக அமைந்ததுடன், நிர்வாக நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது என்றார்.

சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான், மாநில மக்களுக்கான தனது எதிர்கால திட்டங்கள் மற்றும் சேவை சார்ந்த முன்மொழிவுகளை உருவாக்குவதுடன், நிர்வாகம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து தீர்வு காண்பதில் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பானின் 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகக் குழுவில் பின்வருவோர் இடம்பெற்றுள்ளனர்:

நிரந்தரத் தலைவர்: சுல்பட்ஸ்லீ ஷா ஷஹாருடின் (அமானா)

நிரந்தரத் துணைத் தலைவர்: குரத்துல்ஐன் அதீகா நோர்சாஹிருல் அனுவார் (DAP)

தலைவர்: டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி (கெஅடிலான்)

முதல் துணைத் தலைவர்: ங் சே ஹான் (DAP)

இரண்டாவது துணைத் தலைவர்: டத்தோ இஸாம் ஹஷிம் (அமானா)

துணைத் தலைவர் 1: டத்தோ போர்ஹான் அமான் ஷா (கெஅடிலான்)

துணைத் தலைவர் 2: கணபதிராவ் வீரமான் (DAP)

துணைத் தலைவர் 3: அஸ்லி யூசோப் (அமானா)

செயலாளர்: முகமட் கம்ரி கமருடின் (கெஅடிலான்)

உதவிச் செயலாளர் 1: யியோ பீ யின் (DAP)

உதவிச் செயலாளர் 2: கமருல் ஹிஷாம் யோப் ஹஷிம் (அமானா)

பொருளாளர்: ஜமாலியா ஜமாலுடின் (DAP)

தகவல் பிரிவுத் தலைவர்: அப்பாஸ் சலிம்மி அட்ஸ்மி (அமானா)

தேர்தல் பிரிவுத் தலைவர்: யாக்கோப் சபாரி (கெஅடிலான்)

இளைஞர் பிரிவுத் தலைவர்: லீ வென் பின் (DAP)

மகளிர் பிரிவுத் தலைவர்: ராவியா ஸக்காரியா (அமானா)

இயக்குநர்: முகமட் கைருடின் ஒத்மான் (கெஅடிலான்)

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.