ஷா ஆலாம், செப் 25 - மலாக்காவின் 16 -வது மாநிலத் தேர்தலுக்கான முக்கியத் தேதிகள் குறித்து முடிவெடுக்க, தேர்தல் ஆணையம், அக்டோபர் 7-ஆம் தேதி சிறப்புக் கூட்டம் நடத்தும்.
தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாருன் தலைமைத் தாங்கும் அந்தக் கூட்டத்தில் வேட்பு மனுத் தாக்கலுக்கான தேதி, வாக்களிப்புத் தினம், வாக்காளர் பட்டியல் போன்ற விபரங்கள் குறித்து முக்கியமாகப் பேசப்படும்.
அந்த கூட்டத்திற்குப் பின்னர் உடனடியாக ஊடகச் சந்திப்பும் நடைபெறுமென தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் மலாக்கா சட்டமன்றம் கடந்த புதன்கிழமை கலைக்கப்பட்டது.



