1எம்டிபி வழக்கு : தண்டனையை ஒத்தி வைக்கும் நஜீப்பின் மனு அக்.14 செவிமடுப்பு

25 செப்டெம்பர் 2026, 5:15 AM
1எம்டிபி வழக்கு : தண்டனையை ஒத்தி வைக்கும் நஜீப்பின் மனு அக்.14 செவிமடுப்பு

கோலாலம்பூர், செப் 9 - 1MDB வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறை, 1,140 கோடி ரிங்கிட் அபராதம் முதலிய தண்டனையை ஒத்தி வைக்கும் நஜீப் துன் ரசாக்கின் மனு, அக்டோபர் 14-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அந்த தேதியை இன்று முடிவு செய்தது.

நீதிமன்றத்தில் நஜீப்பும் இடம்பெற்ற இன்றைய விசாரணையின் போது, நீதிபதி நூர் ருவேனா மொஹ்ட் நுர்டின் இந்த தேதியை நிர்ணயித்தார்.

கடந்தாண்டு டிசம்பரில், 1 எம்டிபி (1MDB) வழக்கில் உயர் நீதிமன்றம் நஜீப்பிற்கு 15 ஆண்டுகள் சிறையும், 1,140 கோடி ரிங்கிட் அபராதத்தையும் தண்டனையாக விதித்தது.

டிசம்பர் 29-ஆம் தேதி அவர், அந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

எனினும் , அந்த தண்டனை செயல்படுத்தப்படுவதை ஒத்தி வைக்க அவர் கோரவில்லை.

1 எம்டிபி வழக்கில், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக நஜீப்பிற்கு, நீதிமன்றம் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டுகள் சிறையும், மொத்தமாக 1,140 கோடி ரிங்கிட் அபராதத்தையும் விதித்தது.

அந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

கள்ளப் பண மாற்றம் தொடர்பான 21 குற்றச் சாட்டுகளுக்கு, தலா ஒரு குற்றச்சாட்டுக்கு ஐந்தாண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டது.

அந்த சிறை தண்டனைகள் ஒரு சேர செயல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, 73 வயதான நஜீப் மொத்தமாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வார்.

2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 -ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் எஸ்ஆர்சி (SRC) வழக்கிற்கான சிறை தண்டனைக்குப் பிறகு , 1எம்டிபி வழக்கின் சிறைத்தண்டனை செயல்படுத்தப்படும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.