பெரிக்காத்தானுக்கு விளக்கம் கோரி நோட்டிஸ்: நடவடிக்கைகள் இடைநிறுத்தம்: RoS

24 செப்டெம்பர் 2026, 3:17 AM
பெரிக்காத்தானுக்கு விளக்கம் கோரி நோட்டிஸ்: நடவடிக்கைகள்  இடைநிறுத்தம்:  RoS

புத்ராஜெயா, செப் 24 : மலேசிய சங்கங்களின் பதிவுத் துறை (RoS), பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணிக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ், அக்கூட்டணியின் பதிவை ரத்து செய்யும் முடிவு அல்ல;

மாறாக பெர்சத்து கட்சி அளித்த புகார் குறித்து பெரிக்காத்தான் கூட்டணி விளக்கம் அளிப்பதற்காக வழங்கப்பட்ட ஓரு வாய்ப்பாகும்.

1966-ஆம் ஆண்டு சங்கங்களின் சட்டம் [சட்டம் 832] பிரிவு 13(2)-இன் கீழ் அந்த நோட்டீஸ் கடந்த செப்டம்பர் 22 -ஆம் தேதி வழங்கப்பட்டது.

அதற்குப் பதிலளிக்க பெரிக்காத்தான் கூட்டணிக்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இன்று RoS வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

"இந்த நோட்டீஸ், பெர்சத்து கட்சி RoS-இடம் அளித்த புகார் தொடர்பாக பெரிகாத்தானிடம் விளக்கம் கோருவதற்காக மட்டுமே அனுப்பப்பட்டது; இது பதிவை ரத்து செய்யும் முடிவு அல்ல" என்று அந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டது.

இருப்பினும், இந்த நோட்டீஸைத் தொடர்ந்து, சட்டம் 832-இன் பிரிவு 13(2A)-இன் கீழ் இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நேற்று முதல் அமலுக்கு வரும் வகையில் பெரிக்காத்தான் கூட்டணியின் அனைத்துச் செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அந்த இடைக்காலத் தடை உத்தரவு, அந்த அமைப்பு அதன் சொந்த விதிமுறைகளைத் தொடர்ந்து மீறுவதைத் தடுத்து, அமைப்பின் நலனைப் பாதுகாப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று RoS விளக்கியது.

கடந்த ஜூலை 16-ஆம் தேதி நடைபெற்ற பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டத்திற்கு தங்களது கட்சி அழைக்கப்படவில்லை என்று கூறி, கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி பெர்சத்து கட்சி அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்ததை RoS உறுதிப்படுத்தியிருந்தது.

அக்கூட்டணியில் பெர்சத்து கட்சியின் அங்கத்துவம் தொடர்பிலும் அப்புகாரில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அத்துறை தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.