விலை விதிமீறல்: இரு வர்த்தகர்களுக்கு அபராதம் விதித்தது KPDN

23 செப்டெம்பர் 2026, 8:10 AM
விலை விதிமீறல்: இரு வர்த்தகர்களுக்கு அபராதம் விதித்தது KPDN

ஷா ஆலாம், செப்.23: செப்டம்பர் 21 அன்று ஷா ஆலாம் மற்றும் சுபாங்கில் உள்ள வணிக வளாகங்களில் சோதனை நடவடிக்கையை சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையின் போது, ​​விதிமீறல்களுக்காக இரண்டு உடனடி அபராதங்களை (compounds) KPDN விதித்தது.

விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருட்களில் விலைப்பட்டியல்கள் அல்லது விலை விவரங்கள் இல்லாதது குறித்த பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டன.

அதனை தொடர்ந்தே இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் KPDN தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

விலை விவரங்களைக் குறிப்பிடுதல், விலைப்பட்டியல்களைக் காட்சிப்படுத்துதல் மற்றும் அமலில் உள்ள சட்டங்களுக்கு இணங்குதல் போன்ற அம்சங்கள் இந்த ஆய்வுகளில் கவனத்தில் கொள்ளப்பட்டது.

​​2011-ஆம் ஆண்டின் விலை கட்டுப்பாடு மற்றும் அதிக லாபம் ஈட்டுதலுக்கு எதிரான சட்டம்' (Price Control and Anti-Profiteering Act 2011) மற்றும் '1972-ஆம் ஆண்டின் எடைகள் மற்றும் அளவீடுகள் சட்டம்' (Weights and Measures Act 1972) ஆகியவற்றின் கீழ் இரண்டு உடனடி அபராதங்கள் விதிக்கப்பட்டன.

வணிகர்கள் விதிமுறைகளுக்குப் பின்பற்றுவதை உறுதி செய்யவும், மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் சிலாங்கூர் KPDN குறிப்பிட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.