டியூஷன் மையங்களுக்கான 30 % பூமிபுத்ரா பங்குரிமை நீக்கம் : கல்வியமைச்சு

22 செப்டெம்பர் 2026, 1:41 AM
டியூஷன் மையங்களுக்கான  30 % பூமிபுத்ரா பங்குரிமை நீக்கம் : கல்வியமைச்சு

ஷா ஆலாம், செப் 22- கல்வியமைச்சின் கீழ், டியுஷன் மையங்கள் உட்பட தனியார் கல்வி நிலையங்களை நடத்த, தனியார் நிறுவனங்கள் 30 விழுக்காடு பூமித்ரா பங்குரிமையை வைத்திருக்க வேண்டுமெனும் விதிமுறை அகற்றப்பட்டுள்ளது.

முதலீட்டு, வர்த்தக , தொழிற்துறை அமைச்சுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வியமைச்சு தெரிவித்தது.

நாட்டின் கல்வி மேம்பாட்டில் பங்களிக்க விரும்பும் அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளிக்கப்படுவதை உறுதிச் செய்வதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக, கல்வியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

2006 தனியார் கல்வி நிலைய கொள்கை அறிக்கை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த பங்குரிமை குறித்த அதிருப்தியை தனியார் நிலைய நடத்துநர்கள் வெளிப்படுத்தியதை அடுத்து , கல்வியமைச்சு இந்த முடிவை எடுத்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.