பராமரிப்பு பொருளாதாரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

19 செப்டெம்பர் 2026, 2:58 PM
பராமரிப்பு பொருளாதாரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்
பராமரிப்பு பொருளாதாரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்
பராமரிப்பு பொருளாதாரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

ஷா ஆலாம், செப் 19 - பராமரிப்பு பொருளாதாரம், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு,வர்த்தக வாய்ப்பினையும் ஏற்படுத்தி தருகிறது.

முதியோர் பராமரிப்பு போன்ற நேரடி அனுபவங்களின் மூலம் அந்த பராமரிப்பாளர் சேவை துறையை நன்கு அறிந்துக் கொள்ள முடியுமென, மக்கள் சமூக நலத்துக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.

மக்கள் சமூக நலத்துக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி கைய்ரா இல்லத்துக்கு வருகை தந்தார் படம் : அன்ஃபால் சாரி ஃபேஸ்புக்

அண்மையில், 2026 Care Accelerator (XCARE) பராமரிப்பு பொருளாதார பங்கேற்பாளர்கள் ஒன்பது பேருடன் , தாம் கைய்ரா இல்லத்திற்கு( Laman Khaira ) தொழில் ரீதியிலான பயணத்தை மேற்கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

கைய்ரா இல்லம் , செ புவான் இந்தான் ஷஃபினாஸ் ரஞ்சித்தால் நடத்தப்படுகிறது. பரமாரிப்பு பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ள அவரை நேரடியாக சந்தித்த போது, பங்கேற்பாளர்கள் தனிக் கவனம் தேவைப்படும் முதியோர் பராமரிப்பு குறித்து உண்மை நிலையைக் கண்டறிய முடிந்ததாக அவர் கூறினார்.

படம் : அன்ஃபால் சாரி ஃபேஸ்புக்

கலகலப்பாக , கோபமாக, படுத்த படுக்கையாக இருக்கும் வெவ்வேறு நிலையிலான முதியோர்களைக் கவனிப்பதற்கு தனி ஆற்றல் தேவைப்படுகிறது. இது அத்துறையில் காணப்படும் சவால்களில் ஒன்று எனவும் அன்ஃபால் சாரி தமது பேஸ்புக் பதிவின் மூலம் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.