வெப்பநிலையைப் பயன்படுத்தி காய்கறி விலையை உயர்த்தினால் நடவடிக்கை – கே.பி.டி.என் எச்சரிக்கை

18 செப்டெம்பர் 2026, 8:13 AM
வெப்பநிலையைப் பயன்படுத்தி காய்கறி விலையை உயர்த்தினால் நடவடிக்கை – கே.பி.டி.என் எச்சரிக்கை

ஷா ஆலாம், செப்.18 — தற்போதைய கடுமையான வெப்பநிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலையை நியாயமற்ற வகையில் உயர்த்தும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு எச்சரித்துள்ளது.

மக்களிடம் அதிகப்படியான விலையை வசூலிப்பதைத் தடுக்கப் பொருட்களின் தினசரி விலைகளை அமைச்சு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் துணை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ டாக்டர் புசியா சாலே தெரிவித்தார்.

அசாதாரணமான வகையில் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்த செலவின விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு வியாபாரிகளிடம் கேட்க கே.பி.டி.என்-னுக்கு அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் உற்பத்திச் செலவு மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தளவாடச் செலவு உள்ளிட்டவை அடங்கும். இதன் அடிப்படையில் வியாபாரிகள் நிர்ணயித்துள்ள விலை நியாயமானதா என்பதை அமைச்சு மதிப்பிடும் என்றும் அவர் கூறினார்.

எல் நினோ எனப்படும் வெப்பமான வானிலை காரணமாக எதிர்காலத்தில் காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்களின் விலை உயரக்கூடிய சாத்தியம் தொடர்பில் அமைச்சின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் பசார் PATUH திட்டம் தற்போது நாடு முழுவதும் 75 சந்தைகளையும் 7,130 வியாபாரிகளையும் உள்ளடக்கியுள்ளதாக தெரிவித்தார்.

வெப்பமான காலநிலை காரணமாக விநியோகம் அல்லது உற்பத்திச் செலவில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதனை காரணமாகக் கொண்டு பொருட்களின் விலையை நியாயமற்ற முறையில் உயர்த்துவதை அமைச்சு அனுமதிக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.