முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கிம் மெஸ்ரா திட்டத்தில் 50,000 புதிய இட ஒதுக்கீடு

16 செப்டெம்பர் 2026, 3:17 AM
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கிம் மெஸ்ரா திட்டத்தில் 50,000 புதிய இட ஒதுக்கீடு

ஷா ஆலாம், செப்.16 — சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஸ்கிம் மெஸ்ரா திட்டத்தின் கீழ் 50,000 புதிய இடங்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் திறக்கப்படும் என பெண்கள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்துள்ளார்.

யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (YAWAS) மூலம் நிர்வகிக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய பயனாளிகளுக்கு மாநில அரசாங்கம் ஆண்டுதோறும் 150 ரிங்கிட் ஊக்கத்தொகையை வழங்கி வருகிறது.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (OKU) அவர்களது பிறந்த மாதத்தில் பாராட்டு அடையாளமாக இந்த உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அன்ஃபால் சாரி தெரிவித்தார்.

முதியோர் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் மலேசியக் குடிமக்களாகவும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாகவும் இருப்பதுடன், சிலாங்கூரில் வசிக்கும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. எனினும், அவர்கள் மலேசியக் குடிமக்களாக இருப்பதுடன், சமூகநலத் துறையான JKM வழங்கிய செல்லுபடியாகும் மாற்றுத்திறனாளர் அட்டையை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையவர்கள் ஸ்கிம் மெஸ்ரா YAWAS-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

கூடுதல் தகவல்களுக்கு YAWAS தொலைபேசி எண் 03-5481 8800-ஐ தொடர்புகொள்ளலாம் அல்லது pertanyaan.yawas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.