ஷா ஆலம், ஜன 9 - ஸ்கிம் மெஸ்ரா வவுச்சர் திட்டத்திற்கு விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்டவர்கள் எதிர்வரும் ஜனவரி 20 முதல் தங்களின் வவுச்சர்களைப் பெற்று கொள்ளலாம் என யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) முகநூலில் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இவ்வாண்டிற்கான ஸ்கிம் மெஸ்ரா வவுச்சர் திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் யாவாஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஒத்திவைப்பு தற்காலிகமானது என்றும், வவுச்சர் கோரிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகக் பொதுமக்கள் பொறுமையாகக் காத்திருக்குமாறும் யாவாஸ் தனது முகநூல் பதிவில் கேட்டு கொண்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பான எந்தவொரு சமீபத்திய தகவல்களையும் பெற உறுப்பினர்கள் எப்போதும் யாவாஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


