பொருளாதாரம், முதலீட்டுத் துறைகளில் மலேசியா - கேரளம் ஒத்துழைப்பை அதிகரிக்கும்

14 செப்டெம்பர் 2026, 2:56 PM
பொருளாதாரம், முதலீட்டுத் துறைகளில் மலேசியா - கேரளம் ஒத்துழைப்பை அதிகரிக்கும்
பொருளாதாரம், முதலீட்டுத் துறைகளில் மலேசியா - கேரளம் ஒத்துழைப்பை அதிகரிக்கும்

கேரளம், செப் 14 - பொருளாதார ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் , கேரளம் முதலமைச்சர் வி. டி. சதீசன் இருவரும் கலந்துப் பேசினர்.

வர்த்தக -முதலீட்டு நடைமுறைகளை எளிதாக்குவது குறித்தும் அவர்கள் கருத்து பரிமாறிக் கொண்டனர்.

புதுடில்லியில் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் கலந்துக் கொண்ட அன்வார், பிரதமராக முதல் முறையாக கேரளம் மாநிலத்திற்கு வருகை தந்தார்.

அவ்விருவரின் சந்திப்பு கோழிக்கோடு -வில் நடைபெற்றது.

இலக்கிவியல் பொருளாதாரம், சுகாதார பராமரிப்பு, சுற்றுலா, கல்வி மற்றும் உயர் மதிப்புள்ள துறைகளில் மேலும் அணுக்கமான ஒத்துழைப்பை மேற்கொள்வது குறித்து அச்சந்திப்பின் போது முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது, சதீசன் மலேசியாவிற்கு வருகை தரும்படியும் அன்வார் அழைப்பு விடுத்தார்.

இதனிடையே, கேரளம் வர்த்தக சமூகத்துடனும் , அன்வார் சந்திப்பு நடத்தினார்.

அன்வாரின் இந்த அதிகாரப்பூர்வ பயணத்தில், முதலீடு, வர்த்தகம், தொழிற்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி, மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.