ஹங் காங் விமான நிலையத்தில் 8 கிலோ கஞ்சாவுடன் மலேசியப் பெண் கைது

14 செப்டெம்பர் 2026, 12:23 PM
ஹங் காங் விமான நிலையத்தில்  8 கிலோ கஞ்சாவுடன் மலேசியப் பெண் கைது

பெட்டாலிங் ஜெயா, செப் 14 : ஹாங் காங் அனைத்துலக விமான நிலையத்தில், மலேசியப் பெண் ஒருவரின் பயணப் பையில் இருந்து, 8 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் (1.6 மில்லியன் ஹாங்காங் டாலர்) மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டது.

அதையடுத்து, 33 வயதான அப்பெண் கைது செய்யப்பட்டார்.

கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி தாய்லாந்து, பாங்காங்கில் இருந்து வந்திறங்கிய அந்தப் பெண், சுங்கச் சோதனையின் போது தடுத்து நிறுத்தப்பட்டதாக ஹாங்காங் சுங்கத்துறை தெரிவித்தது.

"சுங்கச் சோதனையின் போது, அதிகாரிகளால் அவருடைய பயணப் பைக்குள் சந்தேகத்திற்குரிய 8 கிலோ கஞ்சா மொட்டுகள் (Cannabis buds) கண்டெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்," என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஹாங்காங்கின் அபாயகரமான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின்படி , போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்குக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 50 லட்சம் ஹாங்காங் டாலர் (RM2.6 மில்லியன்) அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம்.

விமான நிலையத்தில் மலேசியர்கள் கஞ்சாவுடன் பிடிபட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.

இதில் ஜூலை மாதத்தில் மட்டும் நிகழ்ந்த மூன்று சம்பவங்கள் அடங்கும்.

கடந்த ஜூலை 30-ஆம் தேதி, பாங்காங்கில் இருந்து வந்திறங்கிய 27 வயது மலேசிய ஆடவர் ஒருவரின் பயணப் பையில் 3 லட்சத்து 11 ஆயிரம் ரிங்கிட் (HK$600,000) மதிப்புள்ள சுமார் 3 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

ஜூலை 16-ஆம் தேதி, பிலிப்பைன்ஸ், மணிலா வழியாக பாங்காங்கில் இருந்து வந்த 19 வயது மலேசிய இளைஞர் ஒருவரின் பயணப் பையில் 10 லட்சத்து நான்காயிரம் ரிங்கிட் (HK$2 மில்லியன்) மதிப்புள்ள சுமார் 11 கிலோ கஞ்சா கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு சம்பவத்தில், ஜூலை 9 -ஆம் தேதி சிங்கப்பூர் வழியாக கோலாலம்பூரிலிருந்து வந்த 19 வயது மலேசிய இளைஞர் ஒருவரின் பயணப் பையில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் (HK$500,000) மதிப்புள்ள சுமார் 3 கிலோ கஞ்சா இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.