செத்தியா ஆலாம் தேசியப் பள்ளியில் தீ ; வகுப்பறை முற்றிலும் அழிந்தது

14 செப்டெம்பர் 2026, 11:41 AM
செத்தியா ஆலாம்  தேசியப் பள்ளியில்  தீ ; வகுப்பறை முற்றிலும்  அழிந்தது

ஷா ஆலாம், செப் 14 : இங்குள்ள பெர்சியாரான் செத்தியா பிரிமாவில் அமைந்திருக்கும் செத்தியா ஆலாம் தேசியப் பள்ளியின் வகுப்பறை ஒன்று, இன்று மாலை ஏற்பட்ட தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

சம்பவத்தின் போது வகுப்பறைக்குள் மாணவர்கள் யாரும் இல்லை என்பதை பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்தியதை அடுத்து, உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மாலை 4.20 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசல் அஸ்பார் தெரிவித்தார்.

" அந்த வகுப்பறை 100 விழுக்காடு முற்றிலும் எரிந்துவிட்டது, தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டுவிட்டது. தீயணைப்பு குழுவினர் அங்கு வந்தபோது, வகுப்பறைக்குள் மாணவர்கள் யாரும் இல்லை என்றும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தலைமையாசிரியர் தெரிவித்தார்" என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஃபேஸ்புக்கில் இருந்து பெறப்பட்ட புகைப்படம்

இந்த சம்பவத்தின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளித் திடலில் ஒன்று திரட்டப்பட்டதாக சில பெற்றோர்களும் தெரிவித்தனர்.

மேலும், வகுப்பறையில் இருந்த உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் தீயில் கருகி சாம்பலாகி விட்டதாக சமூக ஊடகப் பதிவுகள் கூறுகின்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.