ஷா ஆலாம், செப் 5 : கிள்ளான் மாவட்ட ஜோப்கேர் வேலை வாய்ப்பு கண்காட்சி 4, 258 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 36 முதலாளிமார்கள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில் 12, 999 ரிங்கிட் வரை சம்பளம் தரக் கூடிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் மூலம் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளில் 95. 99 விழுக்காடு வேலையிடங்கள் சிலாங்கூர் மாநிலத்தை உள்ளடக்கியது என மாநில மனிதவள ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
முன்னதாக, கிள்ளான் மாவட்ட ஜோப்கேர் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிறுவன முகப்பிடங்களையும் அவர் பார்வையிட்டார்.
சிலாங்கூர் அரசின் இம்முயற்சியின் கீழ், மக்கள் தங்களுக்கு ஏற்ற வேலைகளைத் தேடுவதோடு, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவுமென பாப்பாராய்டு நம்பிக்கைத் தெரிவித்தார்.








