குடிநுழைவுத் துறை லாரியை உட்படுத்திய கோர விபத்து: உடனடி விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

19 ஆகஸ்ட் 2026, 4:14 AM
குடிநுழைவுத் துறை  லாரியை உட்படுத்திய கோர விபத்து: உடனடி விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 - ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில், தனது துறையின் லாரியை உட்படுத்திய விபத்தை முழுமையாக விசாரிக்கும்படி குடிநுழைவுத் துறையைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டார்.

விசாரணையில், விபத்துக்கு சட்ட விதி மீறல் அல்லது கவனக்குறைவு காரணம் என்பது தெரிய வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டுமென, அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் வலியுறுத்தியிருக்கிறார்.

அதே வேளை, அதிகாலையில் நிகழ்ந்த அந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் , மாஜூ ஜங்சன் ( Maju JUnction ) சாலை சந்திப்பில் , குடிநுழைவுத் துறையின் லாரி, சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறியதால் ஏற்பட்ட விபத்தில் , ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் காயமடைந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.