தமிழகக் கோயில்களுக்குள் கைப்பேசியை எடுத்து செல்ல செப்டம்பர் 1 முதல் தடை

12 ஆகஸ்ட் 2026, 9:53 AM
தமிழகக் கோயில்களுக்குள் கைப்பேசியை எடுத்து செல்ல செப்டம்பர் 1 முதல் தடை

சென்னை, ஆகஸ்ட் 12 — தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களின் வளாகங்களுக்குள் பக்தர்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்வதற்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் முழுமையாகத் தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) உத்தரவிட்டுள்ளது.

கோயில் வளாகங்களுக்குள் சிலைகள் மற்றும் தெய்வங்களின் புகைப்படங்களைக் காணொளிகளை எடுப்பது மட்டுமின்றி, செல்ஃபி எடுப்பது, சமூக ஊடகங்களுக்காகக் குறும்படங்கள் மற்றும் ‘ரீல்ஸ்’ தயாரிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்படாது.

மேலும், கோயில் வளாகங்களுக்குள் VIP-க்கள், பிரபலங்கள், பொது வாழ்க்கையில் உள்ள முக்கிய நபர்கள் அல்லது திரையுலகப் பிரபலங்களைப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்கவும் அனுமதி வழங்கக்கூடாது என கோயில் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் கைப்பேசிகளைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காகக் கோயில்களின் நுழைவாயில்களில் அதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒரு கைப்பேசிக்கு 5 இந்திய ரூபாய் என்ற ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்கலாம் என்றும், கைப்பேசியை ஒப்படைக்கும் ஒவ்வொரு பக்தருக்கும் Integrated Temple Management System (ITMS) மூலம் ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை கிளை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.