சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

11 ஆகஸ்ட் 2026, 4:38 PM
சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 : பி.கே.ஆர் (PKR) கட்சியின் வோங் ஜென் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் (EC) உறுதிப்படுத்தியது.

அத்தொகுதி காலியாகியிருப்பதாக நேற்று மக்களவைத் தலைவர் ஜொஹாரி அப்துல் தெரிவித்ததாக தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹருன் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

"கூட்டரசு அரசியலமைப்பின் 54(1)- பிரிவின் படி, இந்தத் தற்காலிக காலியிடத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்று மக்களவைத் தலைவர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தார்.

அதன்படி, P.104 சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு எந்தவொரு இடைத்தேர்தலும் நடத்தப்படாது" என்று கூறப்பட்டது.

மே 2018 முதல் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வந்த வோங், நேற்று முன்தினம் தமது பதவி விலகலை அறிவித்தார்.

கடந்த புதன்கிழமை மக்களவைத் தலைவர் ஜொஹாரியிடம் தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.